/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
"எலக்ட்ரானிக்' முறையில் தேயிலை ஏலம்: மூன்றாண்டில் 100 கோடி கிலோ வரத்து
/
"எலக்ட்ரானிக்' முறையில் தேயிலை ஏலம்: மூன்றாண்டில் 100 கோடி கிலோ வரத்து
"எலக்ட்ரானிக்' முறையில் தேயிலை ஏலம்: மூன்றாண்டில் 100 கோடி கிலோ வரத்து
"எலக்ட்ரானிக்' முறையில் தேயிலை ஏலம்: மூன்றாண்டில் 100 கோடி கிலோ வரத்து
ADDED : ஜூலை 26, 2011 11:17 PM
குன்னூர் : நாட்டில் உள்ள தேயிலை ஏல மையங்களில், எலக்ட்ரானிக் முறையால் மூன்று ஆண்டுகளில் 100 கோடி கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்துள்ளது; 72 கோடி கிலோ விற்கப்பட்டுள்ளது.
குன்னூர், கோவை, கொச்சி, கவுகாத்தி, சிலிகுரி நகரங்களில் தேயிலை ஏல மையங்கள் செயல்படுகின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் உற்பத்தியாகும் தேயிலை தூள் இந்த ஏல மையங்களில் விற்கப்படுகிறது. முன்பு, மனித ஆற்றல் மூலம் தேயிலை ஏலம் நடத்தப்பட்டது. 'ஏலத்தில் பங்கேற்கும் இடைத்தரகர்கள் தங்களுக்குள், 'சிண்டிகேட்' அமைத்து, விலையை கட்டுக்குள் வைப்பதால், தேயிலைக்கு உரிய விலை கிடைப்பதில்லை' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2000ம் ஆண்டு குன்னூர் தேயிலை வாரியம் சார்பில் அனைத்து ஏல மையங்களையும் கம்ப்யூட்டர்மயமாக்க திட்டமிடப்பட்டு, ஏலம் நடத்தும் முறையை வடிவமைக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்தினருக்கு வழங்கப்பட்டது. எலக்ட்ரானிக் ஏலத்தில் அவ்வப்போது ஏற்பட்டு வந்த தொழில்நுட்ப கோளாறு உட்பட பல காரணங்களால், 2007ம் ஆண்டு, கம்ப்யூட்டர் ஏல முறை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மனித ஆற்றல் முறை அமலுக்கு வந்தது. பின், தேசிய பங்கு சந்தையின் தொழில்நுட்ப பிரிவிடம், கம்ப்யூட்டரில் ஏல முறையை வடிவமைக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, 2009 முதல் அனைத்து ஏல மையங்களிலும் மீண்டும் எலக்ட்ரானிக் முறை நடைமுறைக்கு வந்தது. குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் கூறுகையில்,''எலக்ட்ரானிக் ஏல முறையில், 2009 ஆண்டு 19.3 கோடி கிலோ, 2010ல் 53.9 கோடி, 2011ல் 27.5 கோடி என மொத்தம் 100 கோடியே ஏழு லட்சம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு வந்தது. 2009ல் 13.10 கோடி கிலோ, 2010ல் 39.10 கோடி, 2011ல் 20.60 கோடி என, மொத்தம் 72.80 கோடி கிலோ விற்கப்பட்டுள்ளது. ''எந்தவொரு ஏல மையத்தில் இருந்தும் பிற ஏல மையங்களை தொடர்பு கொண்டு ஏலம் எடுக்கும் வசதி இருப்பதால், அனைத்து தரப்பு வர்த்தகர்களும் எலக்ட்ரானிக் ஏல முறையில் பங்கேற்று தேயிலைத் தூளை வாங்கி, உள்நாட்டு, ஏற்றுமதி சந்தையை அதிகப்படுத்த வேண்டும்,'' என்றார்.