ADDED : ஜூலை 29, 2011 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர் : சந்தன மரம் வெட்டி கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனத்துறை சோதனை சாவடி அருகே கடந்த 25ம் தேதி அதிகாலையில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டவர்களை பிடிக்க முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா உத்தரவின்பேரில், வனச்சரகர் சுந்தர்ராஜன் மேற்பார்வையில், வனவர் ராஜ், வன காப்பாளர்கள் சிவகுமார், கோகுல்ராஜ், கோபலன் தலைமையில் 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மசினகுடி குரும்பர்பாடி பகுதியை சேர்ந்த ஆதிவாசி கெம்பன் (55), பொம்மன் (35) நேற்று கைது செய்து, 20 கிலோ சந்தன மரத்துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.