ADDED : செப் 16, 2011 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர் : குன்னூர் புனித அந்தோணியார் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு பாரதிய வித்யா பவன் சார்பில் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் ஜான்சன் தலைமை வகித்தார். பாரதிய வித்யா பவன் உதவித் தலைவர் கவிராஜ், உறுப்பினர்கள் முகுந்த், அனிதா, அமர்சந்த், சுரேந்திர மாலு, சந்துரு ஆகியோர் கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை மாணவர்கள் 12 பேருக்கு தலா 1,000 ரூபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கினர். ஆசிரியர் உலகநாதன் நன்றி கூறினார்.