sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பேரிடர் குறைப்பு தின செயல்முறை விளக்கம்

பேரிடர் குறைப்பு தின செயல்முறை விளக்கம்

பேரிடர் குறைப்பு தின செயல்முறை விளக்கம்


ADDED : அக் 14, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2025 01:41 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்:குன்னுாரில் பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குன்னுார் காந்திபுரம் பள்ளி மைதானத்தில், தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சார்பில், பேரிடர் குறைப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

நிலைய அலுவலர் குமார் தலைமை வகித்து பேசுகையில்,''நிலச்சரிவுகளால் ஏற்படும் பேரிடர்களின் போது மக்களும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். வீடுகளில் காஸ் சிலிண்டர் குழாயில் ஏற்படும் தீயை எளிதாக அணைக்க, குழாய் நுனியில் உடனடியாக மூடலாம்,''என்றார்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை, கட்டர் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பது; காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சுமந்து வருவதன் வழிமுறைகள் குறித்து பேரிடர் மீட்பு செயல் முறை விளக்கம் அளித்தனர். மேலும் தீ விபத்துகளை தவிர்க்க காஸ் சிலிண்டரில் தீ பிடித்தால், தீயை அணைக்கும் வழிமுறைகள் குறித்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில், குன்னுார் தாசில்தார் ஜவகர் முன்னிலை வகித்தார். கிராம மக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us