/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குருவுக்கு மரியாதை செலுத்திய சிஷ்யர்கள்
/
குருவுக்கு மரியாதை செலுத்திய சிஷ்யர்கள்
ADDED : பிப் 27, 2024 11:23 PM

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில், 42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடினர்.
துடியலுார் அருகே உருமாண்டம்பாளையத்தில் அரசு மானிய துவக்கப்பள்ளி உள்ளது.
விரைவில் நூறு ஆண்டுகள் நிறைவடைய போகும் இப்பள்ளியில், இதே ஊரைச் சேர்ந்த ஞான பண்டிதர்,77, ஆசிரியர், 42 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். ஆசிரியரை பெருமைப்படுத்தும் விதமாக அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள், அவருடைய பிறந்தநாளில் பள்ளிக்கு வரவழைத்து, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
இது குறித்து, முன்னாள் மாணவர்கள் கூறுகையில், ''ஆசிரியர் ஞான பண்டிதருக்கு பதவி உயர்வு கிடைத்தும், அதை ஏற்றுக்கொள்ளாமல், கிராமத்தில் படிக்கும் குழந்தைகளின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் இதே பள்ளியில் இருந்து மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். ஓய்வு பெற்ற பிறகும், பள்ளிக்கு வந்து அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகிறார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடந்தது''
என்றனர். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., கிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி, ஆசிரியர் விஜயலட்சுமி, மவுனசாமி, தேவேந்திரன், கந்தசாமி, ஜெய்சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

