/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து சேதம்
/
பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து சேதம்
ADDED : பிப் 07, 2024 11:13 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் கல்லார் அருகே தூரி பாலம் உள்ளது. 100 ஆண்டுகளை கடந்த தூரி பாலம் தன் பலத்தை இழந்ததால் அதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் அருகே சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் புதிதாக பாலம் அமைக்கப்பட்டு, அதில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இதில் சென்று வருகின்றன. ஊட்டிக்கு சுற்றுலா செல்வோர், காய்கறி ஏற்றி வரும் லாரிகள் என இதில் பயணிக்கின்றன.
இதனிடையே கான்கிரீட் பாலத்தின் மேல் உள்ள கான்கிரீட் பெயர்ந்து தற்போது சேதமடைந்துள்ளது. தார் சாலையும், கான்கிரீட் சாலையும் இணையும் இடத்தில் கம்பிகள் வெளியே தெரிகின்றன. உடனே இதனை சரி செய்யாவிட்டால் நாளடைவில் பாலம் முழுவதும் உள்ள கான்கிரீட் சேதமடைய வாய்ப்புள்ளது. உடனே இதனை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கான்கிரீட் பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதம் உடனடியாக சரிசெய்யப்படும், என்றார்.-----

