/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மத்திய கூட்டுறவு வங்கியில் பணி ஒதுக்கீட்டில் தகராறு; திடீர் போராட்டத்தால் பரபரப்பு
/
மத்திய கூட்டுறவு வங்கியில் பணி ஒதுக்கீட்டில் தகராறு; திடீர் போராட்டத்தால் பரபரப்பு
மத்திய கூட்டுறவு வங்கியில் பணி ஒதுக்கீட்டில் தகராறு; திடீர் போராட்டத்தால் பரபரப்பு
மத்திய கூட்டுறவு வங்கியில் பணி ஒதுக்கீட்டில் தகராறு; திடீர் போராட்டத்தால் பரபரப்பு
ADDED : நவ 06, 2024 09:36 PM

ஊட்டி ; மத்திய கூட்டுறவு வங்கியில் பணி ஒதுக்கீட்டில் தகராறு ஏற்பட்டு, ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி சேரிங்கிராசில், மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமை வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த தலைமை அலுவலகத்தில், 'கூட்டுறவு வங்கி, நிர்வாக பிரிவு, கடன் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில், வங்கி மேலாளர்கள், உதவி மேலாளர்கள்,' என, 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் வங்கியில் பொது மேலாளராக சேர்ந்துள்ள வெற்றி வேலன், ஊழியர்களுக்கு பணி ஒதுக்குவது சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று பொது மேலாளர் வெற்றி வேலனுக்கும், வங்கி மேலாளர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
அனைவரும் வேலையை புறக்கணித்து இருக்கையில் இருந்து வெளியேறினர்.
தொடர்ந்து, நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் உத்தரவின் பெயரில், மேலாண்மை இயக்குனர் அய்யனார் அங்கு வந்து இரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், சுமுகத் தீர்வு ஏற்பட்டதை அடுத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். வேலை புறக்கணிப்பு போராட்டத்தால், இரண்டு மணி நேரம் வங்கி சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக் கையாளர்கள் தவித்தனர்.
மேலாண்மை இயக்குனர் அய்யனார் கூறுகையில், ''பணி ஒதுக்கீடு தொடர்பாக பொது மேலாளர் வெற்றி வேலனுக்கும் ஊழியர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பின் சுமுக தீர்வு ஏற்பட்டதை அடுத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்,'' என்றார்.