/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரங்களில் இறக்கப்படும் கட்டுமான பொருட்களால் இடையூறு
/
சாலையோரங்களில் இறக்கப்படும் கட்டுமான பொருட்களால் இடையூறு
சாலையோரங்களில் இறக்கப்படும் கட்டுமான பொருட்களால் இடையூறு
சாலையோரங்களில் இறக்கப்படும் கட்டுமான பொருட்களால் இடையூறு
ADDED : ஜூலை 10, 2025 08:41 PM

கூடலுார்; கூடலுார் நகரில் பகல் நேரங்களில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையோரத்தில் கட்டுமான பொருட்களை இறக்கி எடுத்து செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது.
கூடலுார் நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 'பீக்-ஹவர்' நேரத்தில் வியாபாரிகள் வாகனங்களை நிறுத்தி பொருட்கள் ஏற்றி, இறக்க கூடாது,' என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், பள்ளி மாணவர்கள் போக்குவரத்து இடைவெளி இன்றி காலை நேரத்தில் பள்ளிக்கு சென்று வர வசதியாக காலை, 8:30 முதல் 9:30 மணி முதல் கேரளாவில் இருந்து வரும் கனரக வாகனங்கள் இரும்புபாலம் பகுதியிலும்; கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் மாக்கமுலா பகுதியில் போலீசார் நிறுத்தி கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் பீக்-ஹவர் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
இந்நிலையில், சிலர் பகல்நேரங்களில் நகர சாலையோரங்களில், கட்டுமான பொருட்களை இறக்கி, எடுத்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கும், மக்கள் நடந்து செல்லவும் இடையூறு ஏற்படுகிறது.
கட்டட பணிக்கு தேவையான கட்டுமான பொருட்களை இரவு நேரங்களில் இறக்கி எடுத்து செல்ல வேண்டும்,' என, போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

