/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகனங்களால் இடையூறு; பொதுமக்கள் அவதி
/
வாகனங்களால் இடையூறு; பொதுமக்கள் அவதி
ADDED : டிச 16, 2024 09:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; மார்க்கெட் எதிரே தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
ஊட்டி மார்க்கெட் எதிரே தபால் நிலையம், நியாய விலை கடை, சேட் மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது. இப்பகுதியில் நியாய விலை கடை, தபால் நிலையத்திற்கு செல்லும் பகுதிகளை மறைத்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவது அதிகரித்துள்ளது.
இங்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் வாகனங்கள் இடையூறால் அவதி அடைந்து வருகின்றனர். போலீசார் அபராதம் விதித்து எச்சரித்தாலும், வாகனங்களை நிறுத்துவதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே, போலீசார் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.