தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இடையூறு!

இடையூறு!

இடையூறு!


ADDED : செப் 29, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலையோரம் நிறுத்தப்படும் பழைய வாகனங்களால்... மூன்று மாநில சந்திப்பு பகுதியில் அடிக்கடி பாதிப்பு

கூடலுார்: கூடலுார் கோழிக்கோடு சாலையோரத்தில், நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களை அற்ற நடவடிக்கை இல்லாததால் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தமிழகம்,- கேரளம், கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பு பகுதியாக கூடலுார் உள்ளது. இப்பகுதியில் இருந்து, மூன்று மாநில சாலைகள் பிரிந்து செல்வதால், சாலைகளில் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. மேலும், பல்லாயிரம் சுற்றுலா வாகனங்கள் வருவதால், அதில் வரும் பயணிகள் ஓய்வெடுக்க சாலையோரங்களில் தங்கள் வானங்களை நிறுத்துவது வழக்கம். மேலும், இரவில் வரும் லாரிகளும் சில நேரங்களில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுப்படுகின்றன.

பராமரிப்பு இல்லை இந்நிலையில், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையோரங்களை பராமரிக்காமல் உள்ளதால், பல இடங்கள் சேதமடைந்தும், சாலையோரங்களில் முட்புதர்கள் வளர்ந்தும் காணப்படுகிறது. இப்பகுதியில் மழைநீர் வழிந்தோட கால்வாய்கள் இல்லாததால், சாலையோரங்கள் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு, பிற வானங்கள் வழி விடும்போது விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.

அகற்றாத பழைய வாகனங்கள் மறுபுறம், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் நந்தட்டி வரை, கோழிக்கோடு தேசிய நெடுஞசாலையோரத்தில் பழைய வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பழயை இரும்பு சாதனங்களை பேரீச்சம் பழத்துக்கு கூட யாரும் வாங்க வராதததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த வாகனங்கள் மற்றும் புதர் செடிகள் விஷ ஜந்துக்களின் புகழிடமாக மாறி உள்ளது. மக்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ளது. இரவில் சரக்கு வாகனங்கள் நிறுத்த முடியாத சூழல் உள்ளது. இதனை முறைப்படுத்த நடவடிக்கை இல்லாததால், சுற்றுலா பயணிகள், டிரைவர்கள், உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ‘‘கூடலுாரில் சேர்ந்த பலரும் பயன்படுத்த முடியாத, விற்பனையாகாத தங்களின் பழைய வாகனங்களை, அவர்களின் இடத்தில் நிறுத்தாமல், இப்பகுதி சாலை ஓரங்களில் நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல, பணிமனை வாகனங்களும் வீணாக சாலையோர புதர்களின் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள்; போலீசார்; அரசு துறையினர் நடடிக்கை எடுப்பதில்லை. இப்பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,’’

கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் கூறுகையில்,‘‘இது தொடர்பாக கூடலுார் டி.எஸ்.பி.,யிடம் தெரிவித்து, வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us