/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உழவர் சந்தையில் விலை நிர்ணயத்தில் அதிருப்தி; நடவடிக்கை அவசியம்!
/
உழவர் சந்தையில் விலை நிர்ணயத்தில் அதிருப்தி; நடவடிக்கை அவசியம்!
உழவர் சந்தையில் விலை நிர்ணயத்தில் அதிருப்தி; நடவடிக்கை அவசியம்!
உழவர் சந்தையில் விலை நிர்ணயத்தில் அதிருப்தி; நடவடிக்கை அவசியம்!
ADDED : பிப் 17, 2025 10:27 PM

ஊட்டி; 'ஊட்டி உழவர் சந்தையில் பட்டியலில் உள்ளதை போல காய்கறி விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டியில் கடந்த, 1999 ஆண்டு முதல் மலை காய்கறிகள் விளைவிக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாநில அரசால் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம், அவர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும்சந்தையை அடைய இடைத் தரகர்களை சார்ந்திருக்காத வகையில், அவர்களை தொழில் முனைவோராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
15 சதவீதம் குறைக்க வேண்டும்
அதில், ஊட்டி சேரிங்கிராசில் உழவர் சந்தையில், உள்ளூர் மார்க்கெட்டில் மலை காய்கறிகள் விற்கப்படும் விலையின் அடிப்படையில், ஒவ்வொரு காய்கறிகளுக்கும், 15 சதவீதம் விலை குறைத்து வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
தற்போது, உழவர் சந்தையில், 95 கடைகள் உள்ளன. அதில், விவசாயிகள் வாரத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் கடைகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். மலை மாவட்டம் என்பதால் காலை, 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை செயல்படுகிறது.
நிர்பந்தப்படுத்தும் விவசாயிகள்
இந்நிலையில், மலை காய்கறிகளை விற்பனைக்கும் கொண்டு வரும் விவசாயிகள், 15 சதவீதம் காய்கறி விலையை ஒரு புறம் குறைத்தாலும், மறுப்புறம் சில காய்கறிகளுக்கு, 'வெளியில் அதிக விலை கொடுத்து வாங்கி வந்துள்ளோம்,' என்று கூறி, கூடுதல் விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில நேரங்களில், உள்ளூர் மக்கள் உழவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள விலை பட்டியலை பார்த்து அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து பிரச்னை செய்கின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் விவசாயிகளிடம் கேட்டால், சில விவசாயிகள் தகராறில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக, உழவர்சந்தை வியாபாரம் குறையும் அபாயம் உள்ளது.
நிர்வாக அலுவலர் சிவக்குமார் கூறுகையில், ''வேளாண்மை விற்பனைமற்றும் வணிகத் துறையின் கீழ், இங்கு, 95 கடைகள் வாரத்திற்கு ஒரு முறை விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் கடைகளை பகிர்ந்தளித்து வருகிறோம். காய்கறிகளுக்கான விலையை உள்ளூர் மார்க்கெட் விலையை பொறுத்து, 15 சதவீதம்விலையை குறைத்து விவசாயிகள் விற்க வேண்டும்.
சில நேரங்களில் சில விவசாயிகள் கூடுதல் விலைக்கு விற்பதால் பிரச்னை ஏற்படுகிறது. இதில், உயர் அதிகாரிகள்தலையிட்டு, விலை பட்டியலில் உள்ள விலையில் காய்கறியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

