தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ போதிய மகளிர் பஸ் இல்லாததால் அதிருப்தி

 போதிய மகளிர் பஸ் இல்லாததால் அதிருப்தி

 போதிய மகளிர் பஸ் இல்லாததால் அதிருப்தி


ADDED : பிப் 14, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார், பந்தலுார் வழித்தடத்தில் கூடுதல் மகளிர் இலவச பஸ்கள் இயக்காததால் பெண்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த, 2024 பிப்., முதல் மகளிருக்கான இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. இத்திட்டத்தால் பெரும்பாலான ஏழை பெண்கள் பயனடைந்து வருகின்றனர். கூடலுார் பகுதியில், ஓவேலியை தவிர பிற வழித்தடங்களில் மகளிர் இலவச பஸ், மிக குறைந்த அளவில் இயக்கப்படுகிறது. கூடலுார்,பந்தலுார் வழியாக ஒரு சில பஸ்களில் மட்டுமே மகளிர் இலவச பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். பெரும்பாலான பஸ்கள், 30 கி.மீ., துாரத்துக்கு மேல் இயக்கப்படுவதால், அதில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. அந்த பஸ்களில் கட்டணம் செலுத்தி பயணித்து வருகின்றனர். இதனால், பெண்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பெண்கள் கூறுகையில், 'இவ்வழியாக இயக்கப்படும், பெரும்பாலான அரசு பஸ்களில், பெண்கள் கட்டணம் செலுத்தி பயணித்து வருகிறோம். எனவே, எங்களுக்கும் அரசின் இலவச மகளிர் பஸ் பயன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us