/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோர்ட் உத்தரவை மீறி ஒலிபெருக்கி ஆளுங்கட்சி மீது அதிருப்தி
/
கோர்ட் உத்தரவை மீறி ஒலிபெருக்கி ஆளுங்கட்சி மீது அதிருப்தி
கோர்ட் உத்தரவை மீறி ஒலிபெருக்கி ஆளுங்கட்சி மீது அதிருப்தி
கோர்ட் உத்தரவை மீறி ஒலிபெருக்கி ஆளுங்கட்சி மீது அதிருப்தி
ADDED : மார் 05, 2024 12:42 AM

குன்னுார்;குன்னுாரில் ஐகோர்ட் உத்தரவை மீறி, கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை ஆளுங்கட்சியினர் கட்சி நிகழ்ச்சிக்கு பயன்படுத்தியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொது கூட்டங்கள்; திருவிழாக்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த, ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நேற்று குன்னுாரில் நடந்த பொது கூட்டத்தை தொடர்ந்து, காலை முதல் கட்சி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.
அதில், ஐகோர்ட் உத்தரவு மீறப்பட்டு, கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பஸ் ஸ்டாண்ட் மற்றும் டிசான்ஜரி சாலையில் வைக்கப்பட்டிருந்தது. அதிக சப்தத்தில் பாடல்கள் ஒலிக்க வைத்தது, உள்ளூர் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.