சுற்றுலா பயணிகள் பாதிக்காமல் சோதனை பணி: மாவட்ட கலெக்டர் தகவல்
சுற்றுலா பயணிகள் பாதிக்காமல் சோதனை பணி: மாவட்ட கலெக்டர் தகவல்
ADDED : மார் 23, 2026 03:20 PM
ஊட்டி: 'தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கடந்த, 15 முதல், 22ம் தேதிவரை ஒருவார காலத்தில், 2.59 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நீலகிரியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''நீலகிரியில் கடந்த 15 முதல், 22ம் தேதிவரை ஒருவார காலத்தில 2.59 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, டி.ஆர்.ஓ., தலைமையிலான பறிமுதல் விடுப்பு குழு, இதுவரை, 2.48 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் சோதனையிடும் போது எவ்விதத்திலும் அவர்கள் பாதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
எஸ்.பி., நிஷா கூறுகையில்,''இதுவரை நடந்த தேர்தல் ஆயத்த பணிகளில், 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 22 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபானத்தை பொருத்தவரை, 1.22 லட்சம் ரூபாய் மதிப்பிலான 167 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு, 59 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும், 11 எல்லை சோதனை சாவடிகள் சி.சி.டி.வி., கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன,'' என்றார்.
