/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் அபாய மர கிளைகள் வெட்ட மாவட்ட கலெக்டர் உத்தரவு
/
குன்னுாரில் அபாய மர கிளைகள் வெட்ட மாவட்ட கலெக்டர் உத்தரவு
குன்னுாரில் அபாய மர கிளைகள் வெட்ட மாவட்ட கலெக்டர் உத்தரவு
குன்னுாரில் அபாய மர கிளைகள் வெட்ட மாவட்ட கலெக்டர் உத்தரவு
ADDED : டிச 20, 2024 08:00 PM
குன்னுார்; 'குன்னுாரில் விழும் நிலையில் அபாயகரமாக உள்ள மரக்கிளைகளை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்,' என, மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து, 11 பயனாளிகளுக்கு, 1.66 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,'' குன்னுாரில் மக்களுக்கு பாதுகாப்பற்ற, அபாயகரமாக உள்ள மரக்கிளைகளை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்; தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில், குன்னுார் கூடுதல் கலெக்டர் சங்கீதா, இணை இயக்குனர்கள் ராஜசேகர் (மருத்துவ நலப்பணி), ஷிபிலாமேரி (தோட்டக்கலை), கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.