/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட ஹாக்கி போட்டி: அரசு பள்ளி வெற்றி
/
மாவட்ட ஹாக்கி போட்டி: அரசு பள்ளி வெற்றி
ADDED : ஜூலை 31, 2025 09:23 PM
குன்னூர்; குன்னுாரில் நடந்த பள்ளிகளுக்கு இடையே மாவட்ட ஹாக்கி போட்டியில் அறிஞர் அண்ணா அரசு பள்ளி வெற்றி பெற்றது.
குன்னுார் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில், 'ஹாக்கி யூனிட் ஆப்' நீலகிரிஸ் மற்றும் அண்ணா மேல்நிலைப்பள்ளி சார்பில், பள்ளிகள் அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் நடத்தப்பட்டது.
துவக்க விழாவில், மண்டல உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் பெரியசாமி, பள்ளி தலைமையாசிரியர் டேப்னி மார்கிரேட் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாவட்டம் முழுவதும், 10 அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி, ஊட்டி கிரசன்ட் கேஸ்டல் பள்ளியும் மோதின. அதில், 2--1 என்ற கோல் கணக்கில் அறிஞர் அண்ணா பள்ளி வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.
பரிசளிப்பு விழாவில், ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரிஸ் துணை தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் ராஜா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பாதுகாப்பு பிரிவு இளநிலை அதிகாரி சீனிவாசன், முன்னாள் நகராட்சி தலைவர் சரவணன், கவுன்சிலர் மன்சூர் பங்கேற்று, வீரர்களுக்கு கோப்பைகள் பரிசுகளை வழங்கினர்.
நடுவர்களாக, ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரிஸ் அமைப்பினர் பணியாற்றினர். வெற்றி பெற்ற அணிக்கு ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ் அமைப்பு தலைவர் அனந்த கிருஷ்ணன், செயலாளர் பாலமுருகன் உட்பட பலர் பாராட்டினர்.
ஏற்பாடுகளை, அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியை டாக்டர் குணசுந்தரி. பயிற்றுநர் பிரசாந்த் மணி, பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.