/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட ஹாக்கி போட்டி; மாணவியர் அசத்தல்
/
மாவட்ட ஹாக்கி போட்டி; மாணவியர் அசத்தல்
ADDED : நவ 15, 2024 09:24 PM

ஊட்டி ; நீலகிரி மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி; பெண்களுக்கான ஹாக்கி போட்டி ஆகியவை, ஊட்டி செயின்ட் ஹில்டாஸ் பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜில் நடந்தது.
'ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ் சார்பில் நடந்த போட்டியை, ஹில்டாஸ் பள்ளி முதல்வர் பமீலா ரோட்ரிக்ஸ் துவக்கி வைத்தார்.
அதில், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், லாரன்ஸ் பள்ளி அணி வெற்றி பெற்றது.
ஹில்டாஸ் பள்ளி அணி, 2ம் இடம் பிடித்தது. 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், சாம்ராஜ் பள்ளி அணி வெற்றி பெற்றது. ஹில்டாஸ் பள்ளி அணி இரண்டாம் இடம் பிடித்தது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், லாரன்ஸ் பள்ளி வெற்றி பெற்றது. குன்னுார் சாந்தி விஜய் பள்ளி அணி இரண்டாம் இடம் பிடித்தது. பரிசளிப்பு விழாவில், 'ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ்' அமைப்பு பொருளாளர் ராஜா, பள்ளி முதல்வர் பமீலா ரோட்ரிக்ஸ் கோப்பைகள் மற்றும் பதக்கம் வழங்கினர்.
நடுவர்களாக தேசிய நடுவர் பிரசாந்த் மணி, ஆன்ஸ் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரவி சார்லஸ், கிறிஸ்டோபர், மணிகண்டன், அருண் ஆகியோர் பணியாற்றினர். வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரி அமைப்பு தலைவர் அனந்தகிருஷ்ணன், துணை தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் பாலமுருகன் பாராட்டு தெரிவித்தனர்.
போட்டியை ஹில்டாஸ் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் உமர் பாரூக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஆண்களுக்கான ஹாக்கி போட்டி விரைவில் நடத்தப்பட உள்ளது.