/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
/
மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 02, 2025 07:57 PM
ஊட்டி; முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், 'அண்ணா சைக்கிள்' போட்டிகள், 4ம் தேதி ஊட்டியில் நடக்கிறது.
ஊட்டி தண்டர் வெர்ல்ட் முதல் டீ பார்க் வரை காலை, 8:00 மணிக்கு நடைபெறும் போட்டியில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்க ஏதுவாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில், 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், 15 கி.மீ; மாணவியர், 10 கி.மீ: 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், 20 கி.மீ; மாணவியர் 15 கி.மீ., துாரபோட்டியில் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்கேற்பவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களை, இன்று மாலை, 5:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசுகளுடன், தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும். தவிர, 4 முதல், 10 இடங்களில் வருபவர்களுக்கு, தலா, 250 ரூபாய் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.