ADDED : பிப் 06, 2024 10:04 PM

அ நிறம் | அளவு
குன்னுார்;அருவங்காடு கைரளி அமைப்பு சார்பில், மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடந்தது.
குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கே.வி. பள்ளி மற்றும் கார்டைட் பேக்டரி மேல்நிலை பள்ளியில் அருவங்காடு கைரளி அமைப்பின் சார்பில், நீலகிரி மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடந்தது.
திருவிழாக்கள், மகளிர் திறன், வரலாற்று நிகழ்வுகள் என பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரம் மாணவ, மாணவியர், 5 குழுக்களாக பங்கேற்றனர்.
'ஒவ்வொரு குழுவிலும் சிறந்த, 5 ஓவியங்கள் தேர்வு செய்து விரைவில் பரிசுகள் வழங்கப்படும்,' என, அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
