
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டி கலெக்டர் அலுவலகம் சாலையில் ஜி-1 போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. பல்வேறு வழக்குகளில் சிக்கும் வாகனங்கள் மீட்டு விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வரப்படுகிறது. இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் துருப்பிடித்து முட்புதர் காணப்படுகிறது.
இது போன்று சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களால் பாதசாரிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. மக்கள் கூறுகையில்,' இது போன்ற வாகனங்களை போலீசார் வேறு பகுதியில் நிறுத்தினால், பாதசாரிகளுக்கும்; வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படாது,' என்றனர்.