/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண்ணுக்கு தொல்லை: கோட்ட ஆய அலுவலர் கைது
/
பெண்ணுக்கு தொல்லை: கோட்ட ஆய அலுவலர் கைது
ADDED : மார் 31, 2025 07:33 AM

கூடலுார்; கூடலுார் அருகே நாட்டு கோழி முட்டை வாங்க சென்ற இடத்தில், பெண்ணுக்கு தொல்லை கொடுத்த, கோட்ட ஆய அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் கோட்ட ஆய அலுவலராக பணியாற்றி வருபவர் சித்தராஜ், 54. இவர், மண்வயல் கோழிகண்டி பகுதியில் நேற்று முன்தினம், நாட்டுக்கோழி முட்டை வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அங்கிருந்த, 42 வயது பெண், 'தற்போது முட்டை இல்லை,' என, தெரிவித்துள்ளார். அப்போது சித்தராஜ், திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து தொல்லை செய்துள்ளார். பெண்ணின், சப்தம் கேட்டு உறவினர்கள் வருவதை பார்த்த சித்தராஜ், அங்கிருந்து தப்பியுள்ளார்.
இது தொடர்பாக, கூடலுார் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சித்தராஜை நேற்று கைது செய்தனர்.