/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடர் மழையால் தீபாவளி வியாபாரம் பாதிப்பு
/
தொடர் மழையால் தீபாவளி வியாபாரம் பாதிப்பு
ADDED : அக் 15, 2025 11:00 PM
பந்தலுார்: பந்தலுார் பகுதியில் நேற்று மதியம் பெய்த திடீர், மழையால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டது.
பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலான காலநிலை நிலவி வந்தது. இதனால், பந்தலுார் பஜார் சாலை ஓரங்களில், தமிழக மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள், தற்காலிக கடை அமைத்து தீபாவளி விற்பனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று மதியம் திடீரென கனமழை பெய்ததால், வியாபாரிகள் பாதிக்கப்பட்டதுடன், மக்களும் தீபாவளி பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். பெரும்பாலான வியாபாரிகளின் துணிகள் நனைந்ததால் அவர்கள் அவசர, அவசரமாக கடைகளை காலி செய்து சென்றனர்.
வியாபாரிகள் கூறுகையில்,' தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், வரும் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், கடன் வாங்கி தீபாவளிக்கான பொருட்களை விற்னைக்கு கொண்டு வந்தும் நஷ்டம் அடையும் அபாயம் உள்ளது,' என்றனர்.