/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தீபாவளி பண்டிகை கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
தீபாவளி பண்டிகை கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : அக் 31, 2024 09:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; தீபாவளி பண்டிகையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
குன்னுாரில் தீபாவளி பண்டிகையை ஒட்டி, மவுன்ட் ரோடு விநாயகர் கோவில், தந்தி மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், துருவம்மன் கோவில், கிருஷ்ணர் கோவில், சிவன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் தீபாவளி சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது.
காலையில் இருந்து பக்தர்கள் வழிபட்டனர். விநாயகர் கோவிலில் சிவபெருமானுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. இதே போல, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், உள்ள கோவில்களில் காலை முதல் மக்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

