/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2024 10:34 PM

ஊட்டி:ஊட்டியில் தி.மு.க., அரசை கண்டித்து அ.ம.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 'தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற, தி.மு.க., அரசு, இதுவரை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாநில முழுவதும் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சமுதாயம் சீரழிந்து வருகிறது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. மக்களுக்கு உதவாத தி.மு.க., வரும் தேர்தலில் துாக்கி எரியப்படவேண்டும். ஊழலில் திளைக்கும் தி.மு.க., அமைச்சர்கள் கைது செய்யப்பட வேண்டும்,' என, கோஷம் எழுப்பப்பட்டது.
மாவட்ட அவைத் தலைவர் துரை, ஊட்டி நகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதரன், வாப்பு, தம்பி ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

