தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் ;மா.கம்யூ., ராமகிருஷ்ணன் கருத்து
தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் ;மா.கம்யூ., ராமகிருஷ்ணன் கருத்து
ADDED : ஏப் 19, 2026 05:11 PM

ஊட்டி: ஊட்டி தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும், காங்., வேட்பாளர் ராமசந்திரனை ஆதரித்து, மா.கம்யூ., மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ராமகிருஷ்ணன் கூறியதாவது,
'' கடந்த,10 நாட்களாக மாநிலம் முழுவதும் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் அடிப்படையில், மே., 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது, 'தி.மு.க., தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி. 2023 ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டமானது, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே அமலுக்கு வரும் என்ற நிபந்தனையை கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதற்காகவே, தேர்தல் நேரத்தில் இந்த மசோதாவை பா.ஜ., அரசு கையில் எடுத்துள்ளது.
மோடி குறிப்பிடும் 'டபுள் இஞ்சின்' அரசு என்பது, மாநில உரிமைகளை பறிப்பதாகும்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, மாநில மக்களின் நலனுக்கு எதிரானது. மாநில உரிமைகளையும், திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க, ஊட்டி தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் ராமசந்திரனுக்கு கை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.'' என்றார்
காங்., மாவட்ட தலைவர் நாகராஜ் உட்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
