/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; தி.மு.க., கிளை செயலாளர் கைது
/
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; தி.மு.க., கிளை செயலாளர் கைது
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; தி.மு.க., கிளை செயலாளர் கைது
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; தி.மு.க., கிளை செயலாளர் கைது
ADDED : ஜூன் 23, 2025 10:30 PM

ஊட்டி; மஞ்சூர் அருகே, ரேஷன் கடை பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க., கிளை செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கட்டுப்பாட்டில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. விற்பனையாளராக கிண்ணக்கொரை பகுதியை சேர்ந்த,34, வயது பெண் பணிபுரிகிறார். கணவர் இறந்து விட்டார். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அதே பகுதியில், தி.மு.க., கிளை செயலாளராக உள்ள, மணி (எ) சுப்ரமணி, ரேஷன் கடை பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஓராண்டுக்கு முன், முள்ளிமலை ரேஷன் கடையில் பணிக்கு சேர்ந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மீண்டும் கிண்ணக்கொரை ரேஷன் கடையில் பணியில் சேர்ந்து, பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், சுப்ரணி மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், பெண் ஊழியர் மீது சம்பந்தப்பட்ட துறைக்கு தேவையில்லாமல் மொட்டை கடிதம் எழுதி தொல்லை கொடுத்துள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான பெண், ஏற்கனவே கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.
அப்போது, மஞ்சூர் போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்தனர். சுப்ரமணியிடம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர். இதன்பின், கடந்த ஜூன், 2ம் தேதி ரேஷன் கடைக்கு சென்ற சுப்ரமணி, அந்த பெண்ணுக்கு மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார்.
டார்ச்சர் தாங்க முடியாத பெண், மஞ்சூர் போலீசில் சுப்ரமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சுப்ரமணியை கைது செய்தனர்.