/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'அ.தி.மு.க.,வின் திட்டங்களை முடக்கியது தி.மு.க., அரசு'
/
'அ.தி.மு.க.,வின் திட்டங்களை முடக்கியது தி.மு.க., அரசு'
'அ.தி.மு.க.,வின் திட்டங்களை முடக்கியது தி.மு.க., அரசு'
'அ.தி.மு.க.,வின் திட்டங்களை முடக்கியது தி.மு.க., அரசு'
ADDED : பிப் 15, 2024 12:22 AM
அன்னுார் : 'அ.தி.மு.க அரசு கொண்டு வந்த பல நலத்திட்டங்களை தி.மு.க., அரசு முடக்கிவிட்டது' என தெருமுனைப் பிரசாரத்தில் தலைமை கழக கழக பேச்சாளர் கூறினார்.
வடவள்ளி, கரியாம்பாளையம், கணேசபுரம் பகுதியில் நேற்று முன்தினம் அ.தி.மு.க., சார்பில் தெருமுனைப் பிரசாரம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில் தலைமை வகித்தார்.
தலைமை கழக பேச்சாளர் காளிதாஸ் பேசுகையில், அ.தி.மு.க., அரசு செயல்படுத்தி வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கு கணினி வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டுவிட்டது. உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் வழங்கி வந்த திட்டம், சொந்த வீடு இல்லாதவர்களுக்கு தொகுப்பு வீடு கட்டி தரும் திட்டம் என பல திட்டங்களை தி.மு.க.,அரசு முடக்கிவிட்டது. அனைத்து துறைகளிலும் லஞ்சம் தாண்டவம் ஆடுகிறது, என்றார். ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். வடக்கு ஒன்றியம் சார்பில், கஞ்சப்பள்ளி, அல்ல பாளையம், பசூர் மற்றும் அன்னுார் நகரில் தெருமுனைப் பிரசாரம் நடந்தது. ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி, நகர செயலாளர் சவுக்கத் அலி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

