/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தி.மு.க., செயல்வீரர் கூட்டம் நீலகிரி தொகுதி எம்.பி., பங்கேற்பு
/
தி.மு.க., செயல்வீரர் கூட்டம் நீலகிரி தொகுதி எம்.பி., பங்கேற்பு
தி.மு.க., செயல்வீரர் கூட்டம் நீலகிரி தொகுதி எம்.பி., பங்கேற்பு
தி.மு.க., செயல்வீரர் கூட்டம் நீலகிரி தொகுதி எம்.பி., பங்கேற்பு
ADDED : மார் 18, 2024 12:32 AM

கூடலுார்;கூடலுாரில் தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் பாபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், நீலகிரி எம்.பி., ராஜா பேசுகையில், ''தமிழகத்தில் மழையின் போது ஏற்பட்ட பாதிப்புக்கு அரசு கேட்ட நிவாரணம் இதுவரை மத்திய அரசால் வழங்கப்படவில்லை. நாட்டில் வேலையில்லா தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தல், நாட்டை காப்பாற்ற கூடிய தேர்தல் ஆகும். அதில், எங்கள் கூட்டணிக்கு வெற்றியை தேடி தர வேண்டும்,'' என்றார்
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் லியாகத்அலி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், செயல் வீரர்கள் பங்கேற்றனர். நடுவட்டம் பேரூராட்சி செயலாளர் உதயகுமார் நன்றி கூறினார்.