/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேய்ச்சலில் ஈடுபடும் யானைகளுக்கு இடையூறு செய்யாதீர்: பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

ADDED : மே 04, 2025 09:33 PM

கூடலுார்; 'கூடலுாரில் குடியிருப்பை ஒட்டிய புல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபடும் காட்டு யானைகளுக்கு இடையூறு செய்யாதீர்கள்,' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பக பகுதியில், கடந்த மாதம் துவங்கிய கோடை மழையை தொடர்ந்து, வனப்பகுதி பசுமைக்கு மாறி உள்ளது. வறட்சியால் இடம் பெயர்ந்த காட்டு யானைகள் மீண்டும், இருப்பிடம் திரும்பி வருகிறது.
இவைகள் வனப்பகுதி மட்டுமின்றி, குடியிருப்பு, சாலையை ஒட்டிய புல்வெளிகளில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். இந்த யானைகள் இரவில் குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேய்ச்சலில் ஈடுபடும் காட்டு யானைகளுக்கு சிலர் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். சிறிய குட்டிகளுடன் உலா வரும் யானைகள், கோபமடைந்து மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'குடியிருப்பு பகுதியை ஒட்டிய வனப்பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபட்டு வரும், யானை கூட்டங்களில் சிறிய குட்டிகளும் உள்ளன.
குட்டிகளை பாதுகாப்பதில் யானைகள் தனிகவனம் செலுத்தி வருவது வழக்கம்.
இவைகள் மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.