/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீரமைப்பு பணிகள் நிறைவு டால்பின்நோஸ் இன்று திறப்பு
/
சீரமைப்பு பணிகள் நிறைவு டால்பின்நோஸ் இன்று திறப்பு
சீரமைப்பு பணிகள் நிறைவு டால்பின்நோஸ் இன்று திறப்பு
சீரமைப்பு பணிகள் நிறைவு டால்பின்நோஸ் இன்று திறப்பு
ADDED : டிச 22, 2025 05:38 AM

குன்னுார்: குன்னுாரில் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக மூடப்பட்ட டால்பின் நோஸ் காட்சிமுனை இன்று திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
குன்னுாரில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள டால்பின்நோஸ் காட்சி முனை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டதால், கடந்த செப்., மாதம், 12ம் தேதி மூடப்பட்டது.
இங்குள்ள, நடைபாதை பராமரிப்பு, கழிப்பிடம், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வந்து வெளி பகுதிகளில் இயற்கை காட்சிகளை, ரசித்து போட்டோ எடுத்து சென்றனர். ஆனால், காட்சி முனைக்கு அனுமதிக்கவில்லை.
குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில்,''பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 22ம் தேதி (இன்று) முதல் சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விடப்படுகிறது,'' என்றார்.

