/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேம்பாட்டு பணிகளுக்காக டால்பின்நோஸ் சுற்றுலா மையம் மூடல்
/
மேம்பாட்டு பணிகளுக்காக டால்பின்நோஸ் சுற்றுலா மையம் மூடல்
மேம்பாட்டு பணிகளுக்காக டால்பின்நோஸ் சுற்றுலா மையம் மூடல்
மேம்பாட்டு பணிகளுக்காக டால்பின்நோஸ் சுற்றுலா மையம் மூடல்
UPDATED : செப் 12, 2025 08:59 AM
ADDED : செப் 11, 2025 09:16 PM
குன்னுார்; குன்னுார் டால்பின் நோஸ் காட்சி முனை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள கழிப்பிடம், நடைபாதை பராமரிப்பு இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நேற்று பூமி பூஜை போடப்பட்டு தரை தளம் குப்பட்டா உதவியுடன் இடிக்கப்பட்டு வருகிறது.
வனத்துறையினர் கூறுகையில்,'75 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், 12ம் தேதி (இன்று) முதல் டால்பின் நோஸ் காட்சி முனை, ஒரு மாதம் மூடப் படும்,' என்றனர்.