/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இணைபிரியா தோழிகளான வளர்ப்பு யானைகள்; முதுமலையில் கண்டு வியக்கும் பயணிகள்: இன்று உலக யானைகள் தினம்
/
இணைபிரியா தோழிகளான வளர்ப்பு யானைகள்; முதுமலையில் கண்டு வியக்கும் பயணிகள்: இன்று உலக யானைகள் தினம்
இணைபிரியா தோழிகளான வளர்ப்பு யானைகள்; முதுமலையில் கண்டு வியக்கும் பயணிகள்: இன்று உலக யானைகள் தினம்
இணைபிரியா தோழிகளான வளர்ப்பு யானைகள்; முதுமலையில் கண்டு வியக்கும் பயணிகள்: இன்று உலக யானைகள் தினம்
ADDED : ஆக 11, 2025 08:24 PM

கூடலுார்: முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் இணைபிரியா தோழிகளாக உலா வரும், வளர்ப்பு யானைகள் பாமா; காமாட்சியை பார்த்து சுற்றுலா பயணிகள் வியப்படைகின்றனர்.
ஆசிய யானைகளில், 44 சதவீதம் யானைகள் நம் நாட்டில் உள்ளன. இவற்றால் காடுகள் காப்பாற்றப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
மேலும், யானைகள் சாந்தமான குணத்திலும், கூட்டமாக நட்புடன் வாழ்வதிலும், மனிதர்களை போன்ற வாழ்வியலை கொண்டுள்ளன. இதற்கு உதாரணமாக, முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், இணைபிரியா தோழிகளான உலா வரும் வளர்ப்பு யானைகள் பாமா, காமாட்சி ஆகியவை திகழ்கின்றன.
முதுமலை காப்பகத்தில் தற்போது, மூன்று குட்டிகள் உட்பட, 30 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த யானைகளின் விளையாட்டு, உணவு உட்கொள்ளும் முறை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் நாள்தேறும் ரசித்து செல்கின்றனர். இங்குள்ள குட்டி யானைகள் மற்றும் பாகன் தம்பதியின் பாச உணர்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம் பெற்ற, குட்டி யானைகள் ரகு, பொம்மியை ஆர்வத்தோடு பலரும் ரசித்து செல்கின்றனர்.
இந்த, குட்டி யானைகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி நேரில் வந்து பார்த்ததுடன், ஆஸ்கார் ஆவணப்படத்தில் இடம் பெற்ற குட்டி யானைகளுக்கும்; 76 வயதான சீனியர் யானை பாமாவுக்கும் கரும்பு கொடுத்தனர். இதன் மூலம் பாமாவும் புகழ் பெற்றுள்ளது.
தோழிகளாக வலம் வரும் யானைகள் இந்நிலையில், இங்குள்ள வளர்ப்பு யானை பாமாவும், இதன் தோழியான காமாட்சி, 66, ஆகிய பெண் யானைகளின் நட்பின் கதை இங்கு வரும் பார்வையாளர்களை வியப்படைய செய்துள்ளது.
அதில், வளர்ப்பு யானை பாமா, 1963-; காமாட்சி 1960ல் முதுமனைக்கு கொண்டுவரப்பட்டன. பாமாவின் குட்டிகளின் ஒன்றான, வசிம் தற்போது முதுமலையில் சிறந்த கும்கியாக உள்ளது. வளர்ப்பு யானைகள், இந்திரா, உதயன் (மக்னா) ஆகியவை, காமாட்சியின் வாரிசுகளாகும்.
இந்த இரு யானைகளும் பல ஆண்டுகளாக பிரியா நட்புடன் உயிர் தோழிகளாகவே இன்றும் உலா வருகின்றன. முகாமில் உணவு கொடுக்கும் போதும், வனத்தில் மேய்ச்சலுக்கு செல்லும் போதும், நடை பயிற்சிகள் மேற்கொள்ளும்போதும் ஒன்றாகவே செல்கின்றன. இந்த இரு யானைகளின் வியக்க வைக்கும் நட்பு குறித்து, இங்குவரும் பயணிகளிடம் பாகன்கள் பெருமையாக தெரிவித்து வருகின்றனர்.