sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இங்கு வர வேண்டாம்... திரும்பி போயிருங்க...!

இங்கு வர வேண்டாம்... திரும்பி போயிருங்க...!

இங்கு வர வேண்டாம்... திரும்பி போயிருங்க...!


ADDED : பிப் 28, 2024 09:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 09:57 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம் : பவானி ஆற்றின் ஆபத்தான பகுதி என கண்டறியப்பட்ட இடங்களுக்கு வருவோரை, போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்.

கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் பலர், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்து மகிழ வருகின்றனர். பவானி ஆற்றில், பில்லுார் அணை, பம்பிங் ஹவுஸ்களில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடும் போது, வரத்து அதிகரிக்கும். அப்போது, ஆற்றில் குளிப்பவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

பவானி ஆற்றில் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க லைப் கார்ட்ஸ் பிரிவு போலீசார், தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். எனினும், இளைஞர்கள் வருகை அதிகரித்துள்ளதால், போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:

பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகள் என வெள்ளிப்பாளையம் பாயிண்ட் 1, 2, 3, சிறுமுகை, ஆலாங்கொம்பு, ராமர் கோவில், அம்மன் பழத்தோட்டம், வச்சினம்பாளையம், வேடர் காலனி, ஊமபாளையம், கல்லார் கார்டன், துாரி பாலம், ரயில்வே கேட், எஸ்.எம். நகர் வாட்டர் டேங், சமயபுரம் செக்டேம், வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, பம்ப் ஹவுஸ், குண்டுகல் துறை, விளாமரத்தூர் என 19 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில், யாரும் குளிக்கக்கூடாது. திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். தற்போது, பவானி ஆற்றுக்கு வருவோரை எச்சரித்து திருப்பி அனுப்புகிறோம். கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு, போலீசார் கூறினர்.---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us