/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'காஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் தொகை கொடுக்க வேண்டாம்'; விழிப்புணர்வு முகாமில் அறிவுரை
/
'காஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் தொகை கொடுக்க வேண்டாம்'; விழிப்புணர்வு முகாமில் அறிவுரை
'காஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் தொகை கொடுக்க வேண்டாம்'; விழிப்புணர்வு முகாமில் அறிவுரை
'காஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் தொகை கொடுக்க வேண்டாம்'; விழிப்புணர்வு முகாமில் அறிவுரை
ADDED : மார் 19, 2025 08:07 PM

குன்னுார்; 'வீடுகளுக்கு கொண்டு வரும், காஸ் சிலிண்டருக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டாம்,' என, விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.
குன்னுார் அருகே, கோடேரி கிராமத்தில் சமையல் காஸ் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. குன்னுார் பாதுகாப்பு சங்கம் மற்றும் நீலகிரி காஸ் ஏஜென்சி இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, ஊர் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
காஸ் வினியோக நிறுவன மேலாளர் சீத்தாராமன், காஸ் அடுப்பு பராமரிப்பு, சிலிண்டரை கையாளும் முறைகள் குறித்து, கருவிகளை கொண்டு செயல் விளக்கம் அளித்த பின், பேசுகையில், ''காற்றை விட கனமான காஸ் தரை மட்டத்தில் தங்கிவிடும் என்பதால் வாயு கசிவு ஏற்படும் போது அறையின் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.
மேலும், மின் விளக்குகளை அணைக்கவோ, எரியவிடவோ கூடாது உடனடியாக ரெகுலேட்டரை அணைத்து விடவேண்டும். இன்றையச் சூழலில் டி.வி., மொபைல் போன்றவைகளை பார்த்து கொண்டே சமைப்பதால், கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்துகள் அதிகமாகி வருகின்றன. எனவே மகளிர் கவனமாக இருக்க வேண்டும்,''என்றார்.
குன்னுார் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் பேசுகையில், ''ஐ.எஸ்.ஐ., தர முத்திரை கொண்ட காஸ் தொடர்புடைய அடுப்பு, குழாய், ரெகுலேட்டர், லைட்டர் போன்றவைகளை வாங்க வேண்டும். சிலிண்டர் வாங்கும் போது கட்டாயமாக பில் கேட்டு வாங்க வேண்டும்.
பில்லில் உள்ள தொகையில், வீடுகளுக்கு கொண்டு வந்து வினியோகிப்பதற்கான தொகையும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, வீடுகளுக்கு கொண்டு வரும், காஸ் சிலிண்டருக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டாம்.
அவ்வாறு கூடுதல் தொகை கேட்டால் புகார் அளிக்க வேண்டும். அரசு வழங்கும் மானிய தொகை வரவில்லை என்றால், வங்கி மற்றும் வினியோகிப்பாளரை தொடர்பு கொள்ள வேண்டும்.
அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அத்தியாவசியமான காஸ் சிலிண்டர் வினியோகத்தில் எக்காரணம் கொண்டும் சுரண்டலை அனுமதிக்கக்கூடாது,'' என்றார்.
நிகழ்ச்சியில் திரளான மகளிர் பங்கேற்றனர்.