தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 5,54,840 வாக்காளர்கள் ; மூன்று நாட்கள் சிறப்பு முகாம்

நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 5,54,840 வாக்காளர்கள் ; மூன்று நாட்கள் சிறப்பு முகாம்

நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 5,54,840 வாக்காளர்கள் ; மூன்று நாட்கள் சிறப்பு முகாம்


UPDATED : நவ 12, 2026 06:05 PM

ADDED : நவ 12, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 06:05 PM ADDED : நவ 12, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில், இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களை விட, 2,834 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

தேசிய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 2027ம் ஆண்டு ஜன., 1ம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்–2027 ஆனது, 2026நவ., 12 ம் தேதி முதல், 2026 டிச.,11 ம் தேதி வரை நடக்கிறது. இது தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று, கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

வாக்காளர் விபரம்:



ஊட்டி தொகுதி :



90,134 ஆண் வாக்காளர்கள்; 99, 679 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர், 11 பேர், என, மொத்தம், 1,89,824 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கூடலூர் ( தனி) தொகுதி :



90,292 ஆண் வாக்காளர்கள்; 95,976 பெண் வாக்காளர்கள்; மூன்றாம் பாலினத்தவர், 7 பேர் , என , மொத்தம், 1,86,275 வாக்காளர்கள் உள்ளனர்.

குன்னூர் தொகுதி :



84,315 ஆண் வாக்காளர்கள்; 94,418 பெண் வாக்காளர்கள்; மூன்றாம் பாலினத்தவர், 8 பேர் என, மொத்தம், 1,78,741 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

விண்ணப்பிக்க அழைப்பு :



மூன்று தொகுதிகளில் மறு சீரமைக்கப்பட்ட ஓட்டு சாவடிகளில் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. 2027 ஜன., 1ம் அன்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க டிச ., 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், தகுதி வாய்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பிழை திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு ஓட்டு சாவடியிலும் நியமிக்கப்பட்ட அலுவலர்களிடம் அனைத்து வேலை நாட்களிலும் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை உரிய படிவத்தை பெற்று உரிய ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம் இம்மாதம், 21,22 மற்றும் 29 ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. ஆட்சேபனைகள் டிச ., 11 ம் தேதி தெரிவிக்கலாம்.

கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ‘‘ நீலகிரியில் உள்ள மூன்று தொகுதிகளில், 2,64,741 ஆண் வாக்காளர்கள்; 2,90,073 பெண் வாக்காளர்கள்; 26 மூன்றாவது பாலினத்தவர் என , மொத்தம், 5,54,840 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த, ஏப்., 6 ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களை விட, 2,834 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us