/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காப்பக முதியோருக்கு ஆடை வழங்கும் விழா
/
காப்பக முதியோருக்கு ஆடை வழங்கும் விழா
ADDED : நவ 01, 2024 09:57 PM

ஊட்டி; ஊட்டி முள்ளிகொரை காப்பகத்தில் தங்கியுள்ள முதியோருக்கு, தீபாவளியை முன்னிட்டு, ஆடை மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
ஊட்டி அருகே அமைந்துள்ள முள்ளிகொரை பகுதியில், நகராட்சி பராமரிப்பில், 'அன்பு, அறிவு' அறக்கட்டளை காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில், 50க்கும் மேற்பட்ட முதியோர் தங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில், தீபாவளியை முன்னிட்டு காப்பகத்தில் தங்கி உள்ளவர்களுக்கு ஆடை மற்றும் இனிப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில், மாநில அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதியோருக்கு, ஆடை மற்றும் இனிப்பு வழங்கினார். நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் கேப்டன் மணி முன்னிலை வகித்தார். செஞ்சுலுவை சங்க நிர்வாகிகள் உட்பட, பலர் பங்கேற்றனர்.

