ADDED : பிப் 11, 2026 06:55 AM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டில், குடிநீர் கிடைக்காமல் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இங்கு புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் பல்வேறு நகரங்கள், கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாணவ, மாணவியர் இங்கு வருகின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்டில் போதிய குடிநீர் வசதிகள் இல்லை. குடிநீர் சுத்திகரிப்பு கருவியும் பழுதடைந்து சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் கிடைக்காமல் பயணியர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சுத்திகரிப்பு சீரமைத்து, பயணியருக்கு தேவையான குடிநீர் வசதி செய்து தர, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
