/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரேலியா அணை நிரம்பிய போதும் குடிநீருக்கு தடை; பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்
/
ரேலியா அணை நிரம்பிய போதும் குடிநீருக்கு தடை; பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்
ரேலியா அணை நிரம்பிய போதும் குடிநீருக்கு தடை; பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்
ரேலியா அணை நிரம்பிய போதும் குடிநீருக்கு தடை; பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்
ADDED : டிச 26, 2024 10:04 PM

குன்னுார்; குன்னுாரில் உள்ள நீராதாரங்களில் போதுமான தண்ணீர் இருந்தும் நகரில், விலை கொடுத்து குடிநீரை வாங்கும் அவலம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குன்னுார் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதனால், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்து. குன்னுார் நகராட்சியின், 30 வார்டுகளுக்கான குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணையின் நீர் தேக்கி வைக்கப்பட்டு, அவ்வப்போது, வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ரேலியா அணை நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில், 'குன்னுார் ரேலி காம்பவுண்ட் உட்பட சில பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை,' என, புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் இந்தப் பகுதியில் குடிநீர் வினியோகம் தடை பட்டது குறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் அனுப்பிய நிலையில் விசாரணை நடந்துள்ளது. அதில், 'குடிநீர் அப்பகுதியில் வருகிறது' என்ற கலெக்டருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பகுதியில், 14 நாட்களாகியும் குடிநீர் வராததால், இப்பகுதி மக்கள் பணம் கொடுத்து, குடிநீரை லாரிகளில் கொண்டு வந்து பயன்படுத்தும் அவலம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த தேவி கூறுகையில்,'' இங்குள்ள தண்ணீர் பிரச்னை குறித்து பலமுறை தெரிவித்தும் நகராட்சி நடவடிக்கை எடுக்காததால், ஆயிரம் லிட்டர் தண்ணீர், 1,200 ரூபாய் கொடுத்து லாரிகளில் கொண்டு வந்து பயன்படுத்தி வருகிறோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

