/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிரேக் பிடிக்காத வாகனம்; விபத்தில் டிரைவர் காயம்
/
பிரேக் பிடிக்காத வாகனம்; விபத்தில் டிரைவர் காயம்
ADDED : ஜன 03, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : ஊட்டி அருகே அனுமாபுரம் பகுதியிலிருந்து, கேரட் ஏற்றிய பிக்-அப் வாகனம், கர்நாடகா செல்வதற்காக நேற்று மாலை, 5:45 கூடலுார் நோக்கி வந்தது. வாகனத்தை பெட்டாசாமி, 25, என்பவர் ஓட்டி வந்தார். கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே வரும்போது, வாகனத்தில் பிரேக் பிடிக்கவில்லை.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பூட்டிய கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில், டிரைவர் பெட்டாசாமி காயங்களுடன் உயிர் தப்பினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீஸ் விசாரிக்கின்றனர்.