/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகளை தவிக்க விட்டு காரை எடுத்து சென்ற டிரைவர்
/
சுற்றுலா பயணிகளை தவிக்க விட்டு காரை எடுத்து சென்ற டிரைவர்
சுற்றுலா பயணிகளை தவிக்க விட்டு காரை எடுத்து சென்ற டிரைவர்
சுற்றுலா பயணிகளை தவிக்க விட்டு காரை எடுத்து சென்ற டிரைவர்
ADDED : மார் 30, 2025 10:35 PM
குன்னுார்; குஜராத்தை சேர்ந்த அரசு ஊழியர் சந்திப், நர்ஸ் ரீனா தம்பதி, கோவையில் தனியார் டிராவல்ஸ் வாடகை கார் எடுத்து, ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் சுற்றுலா முடித்து நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் கோவைக்கு திரும்பினர்.
அப்போது, காட்டேரி பார்க் அருகே இருவரும், காரில் இருந்து இறங்கினர். அப்போது, டிரைவர் காரை திடீரென எடுத்து, அதிவேகத்தில் சென்றுள்ளார். அதில், இரு மொபைல் போன்கள், லேப்டாப் உட்பட அனைத்து பொருட்களும் இருந்த நிலையில், இருள் சூழ்ந்த வனம் சூழ்ந்த ரோட்டில், தம்பதியினர் இருவரும் தவித்தனர்.
அப்போது அங்கு வந்த, 'ஹைவே பேட்ரோல்' போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பாபு மற்றும் சுனில் தீப் ஆகியோர் விசாரித்தனர். பதிவெண் கூட தெரியாத நிலையில், உடனடியாக கல்லார் சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, உஷார் படுத்தி கார்கள் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
தம்பதியினர் இருவரையும், 'ஹைவே பேட்ரோல்' போலீசார், வாகனத்தில் ஏற்றி கல்லார் சென்றனர்.
இதில், துாரிபாலம் அருகே சந்தேகத்துக்குரிய காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். டிரைவரை அடையாளம் காட்டிய பிறகு, காரில் இருந்த பொருட்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் உட்பட பைகள் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. பொருட்கள் உடனே கிடைத்ததால், சுற்றுலா பயணிகள் 'புகார் வேண்டாம்' என்று கூறி, போலீசுக்கு நன்றி தெரிவித்து சென்றுள்ளனர்.
சம்பந்தப்பட்ட டிரைவர் சுப்ரமணி குன்னுாருக்கு வரவழைத்து, கோவையை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து காரை ஒப்படைத்தனர். டிரைவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
எஸ்.ஐ., பாபு கூறுகையில்,''சுற்றுலா பயணிகள் இருவரும் அரசு ஊழியர்கள் என்பதால் அவசரமாக செல்ல வேண்டும் என்பதற்காக, புகார் அளிக்காமல் சென்று விட்டனர். நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், வாடகைக்கு வாகனங்களை எடுத்து வரும் போது, வாகனங்களின் பதிவு எண், டிரைவர் மொபைல் போன் எண் உட்பட கார் விபரங்களை கட்டாயம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். மலைப்பாதையில் இது போன்ற பாதிப்பு ஏற்பட்டால் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.