/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் மலை பாதையில் காட்டெருமை; கவனமாக செல்ல டிரைவர்களுக்கு அறிவுரை

UPDATED : ஏப் 10, 2025 11:03 PM
ADDED : ஏப் 10, 2025 09:39 PM

குன்னுார், ;குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், உலா வரும் காட்டெருமைகளால் விபத்து அபாயம் உள்ளதால், வாகனங்களில் செல்வோர் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார்-- மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில், யானை, கரடி, காட்டெருமைகள் உலா வருகின்றன. அதில், கே.என்.ஆர்., ஈச்ச மரம் உட்பட பல இடங்களிலும் உலா வரும் காட்டெருமைகள் அவ்வப்போது, திடீரென சாலையை கடந்து ஓட்டம் பிடிக்கின்றன.
இந்நேரங்களில், சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில்,'சாலையோரத்தில் காட்டெருமைகள் இருக்கும் நிலையில், வாகனங்களை ஓட்டி செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக செல்ல வேண்டும்.
காட்டெருமைகளை போட்டோ மற்றும் அருகில் சென்று 'செல்பி' எடுக்க கூடாது,' என்றனர்.