/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதுகாப்பான பஸ் பயணம் டிரைவர்கள் உறுதிமொழி
/
பாதுகாப்பான பஸ் பயணம் டிரைவர்கள் உறுதிமொழி
ADDED : டிச 29, 2025 06:23 AM

குன்னுார்: தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளைகள், அலுவலகங்களில் பாதுகாப்பான பஸ் இயக்கத்திற்கான வாரம் வரும், 31ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
குன்னுார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், பாதுகாப்பான பஸ் இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. போக்குவரத்து கிளை மேலாளர் ராஜ்குமார் தலைமை வகித்து உறுதிமொழி வாசிக்க, டிரைவர்கள், கண்டக்டர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
'பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தல், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல், வேகத்தை குறைத்தல், பயணிகளிடம் கணிவுடன் பழகுதல், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது,' என, வலியுறுத்தப்பட்டது. ஆய்வாளர்கள், நேரக்காப்பாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் பங்கேற்றனர்.

