தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/புதர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

புதர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

புதர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 07:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலூர்: பந்தலூரில் மாநில நெடுஞ்சாலையில் புதர்கள் வளர்ந்துள்ளதால் வாகன விபத்து அதிகரித்துள்ளது.

கூடலூரில் இருந்து தேவாலா வழியாக பந்தலூர் மற்றும் கேரளா கோழிக்கோடு, வயநாடு பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இந்த சாலையில் தேவாலா முதல் பந்தலூர் வரையிலான சாலை அதிக வளைவுகளை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. சாலையின் இரண்டு பகுதியிலும், புதர்கள் வளர்ந்துள்ளதால் எதிரே வாகனங்கள் வரும்போது, தெரியாமல் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

மாநில நெடுஞ்சாலையாக உள்ளதால் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கிறது.

சாலையின் ஒரு பகுதி தாழ்வாக அமைந்துள்ள நிலையில், பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க, சாலையோர புதர்களை அகற்ற வேண்டும். என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us