/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீரமைக்காமல் விடப்பட்ட மாநில நெடுஞ்சாலை வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி
/
சீரமைக்காமல் விடப்பட்ட மாநில நெடுஞ்சாலை வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி
சீரமைக்காமல் விடப்பட்ட மாநில நெடுஞ்சாலை வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி
சீரமைக்காமல் விடப்பட்ட மாநில நெடுஞ்சாலை வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி
ADDED : பிப் 10, 2026 04:52 AM

கூடலுார்: கூடலுார் கோழிக்கோடு சாலையில், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், 300 மீட்டர் சாலையை, நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோழிக்கோடு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையில், செம்பாலா முதல் நாடுகாணி வரையிலான, 9 கி.மீ., சாலை சில ஆண்டுகளுக்கு முன் சீரமைத்தனர். பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் செம்பாலா வரையிலான, 1.4 கி.மீ., தூரம் சாலை சீரமைக்கவில்லை.
அந்த பகுதி தொடர்ந்து சேதமடைந்ததால், ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் அப்பகுதி சிரமப்பட்டு கடந்து சென்றனர். சாலையை சீரமைக்க வலியுறுத்தி வந்தனர். கடந்த நவ., மாதம் செம்பாலாவில் துவங்கி, டி.கே.,பேட்டை தனியார் திருமண மண்டபம் வரை, 1.1 கி.மீ., துாரம் சீரமைத்தனர். அங்கிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரையிலான, 300 மீட்டர் துாரம் சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், இப்பகுதியில் சேதமடைந்த குழிகளில் 'ரெடிமேட்' தார் கலவை கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர். இப் பகுதி நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கோழிக்கோடு சாலையில், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் செம்பாலா வரை சேதமடைந்த, 1.4 கி.மீ., சாலையில், 1.1 கி.மீ., சீரமைத்து, 300 மீட்டர் துாரம் இருப்பதற்கு, சாலை சீரமைப்பு குறித்து அதிகாரி கள் அரசுக்கு அனுப்பிய திட்ட அறிக்கையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இருக்கலாம். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வதுடன், சேதமடைந்துள்ள, 300 மீட்டர் சாலையை தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'திட்ட அறிக்கையின் படி, ஒதுக்கப்பட்ட நிதியில் 1.1 கி.மீ., வரை சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 300 மீட்டர் தூரம் நிதி பெற்று சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,' என்றனர்.

