/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின இளையோர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி துவக்கம்
/
பழங்குடியின இளையோர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி துவக்கம்
பழங்குடியின இளையோர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி துவக்கம்
பழங்குடியின இளையோர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி துவக்கம்
ADDED : நவ 14, 2025 09:13 PM

பந்தலுார்: பந்தலுார் பழங்குடியின இளையோர்களுக்கு, அரசு மூலம் இலவச ஓட்டுனர் பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது.
பந்தலுார் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் இன்பநாதன் வரவேற்றார். பழங்குடியினர் நலத்துறை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், படித்த இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. அதில், தங்களுக்கு ஓட்டுனர் பயிற்சி வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை மனு பழங்குடியின மக்கள் சார்பில் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டரின் முயற்சியால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 14 பெண்கள் உள்ளிட்ட, 30 பேருக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெறும் பழங்குடியின இளையோர், ஓட்டுநர் உரிமத்தை வாங்கி வெறுமனே வைக்காமல், அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் டாக்சி வாகனம் ஓட்டுதல் போன்ற வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்,''என்றார். நிகழ்ச்சியில், பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் பங்கேற்றனர்.

