/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ட்ரோனில் தேயிலை தோட்டங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி; நீலகிரியில் முதன் முறையாக துவக்கம்

UPDATED : ஏப் 10, 2025 11:02 PM
ADDED : ஏப் 10, 2025 09:43 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே, ட்ரோன் உதவியுடன் தேயிலை தோட்டங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம் மற்றும் வால்பாறை பகுதிகளில், தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப ாலமாக தேயிலை தோட்டங்களில் இலை பறிப்பது, களை அகற்றுவது மற்றும் மருந்து தெளிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு போதிய தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாகி வருகிறது.
இதனால். தொழிலாளர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்ய தோட்ட நிர்வாகம் பல்வேறு நவீன முறைகளை கையாள துவங்கி உள்ளது. அதில், பசுந்தேயிலை பறிக்க பேட்டரி மூலம் இயக்கப்படும் இயந்திரங்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் தேயிலை தோட்டங்களில் மருந்து தெளிக்க, முதல் முறையாக ட்ரோன் முறை நீலகிரியில் துவக்கப்பட்டு உள்ளது. பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் செயல்படும் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம், இந்த பணியை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள ட்ரோன் மற்றும் அதன் ஆபரேட்டர்கள் உதவியுடன், காலை; மாலையில் மருந்து தெளிக்கப்படுகிறது. 10 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட ட்ரோனில் ஒரு மணி நேரத்திற்கு, 25 ஏக்கர் தோட்டத்திற்கு மருந்து தெளிக்க இயலும். இந்த முறையை அருகில் உள்ள பிற தேயிலை தோட்ட நிர்வாகத்தினரும் மேற்கொள்ள உள்ளனர்.