UPDATED : ஜூன் 21, 2026 06:51 PM
ADDED : ஜூன் 21, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
குன்னூர்:குன்னூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஜூன் 20 இரவு, போதை ஆசாமி ஒருவர், தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டார். வீட்டுக்கு செல்ல பெண் காவலர் அறிவுறுத்தியதால் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். போலீசார் அங்கிருந்து அனுப்ப முயன்ற போது, இரும்பு பைப்பை எடுத்து போக்குவரத்து கண்காணிப்பு கூண்டு கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன், தடுக்க முயன்ற போலீசாரை கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், குன்னூர் ராஜாஜி நகரை சேர்ந்த முகம்மது ராஹீப், 23 என்பது தெரியவந்தது. குன்னூர் டவுன் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.
அவரிடம் கஞ்சா புழக்கம் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
