/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் அம்பேத்கர் நகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
/
பந்தலுார் அம்பேத்கர் நகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
பந்தலுார் அம்பேத்கர் நகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
பந்தலுார் அம்பேத்கர் நகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : நவ 27, 2024 09:13 PM
பந்தலுார்; பந்தலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகோபால் தலைமையில் மாணவர்கள், பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பந்தலுார் அம்பேத்கர் நகர் பகுதியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் தண்டபாணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் மோகன் தலைமை வகித்தார். அதில், 'இளைய தலைமுறையினர் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்துள்ளதால், எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டது.
விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் செந்தில்குமார், ஸ்டீவன்சன், முர்ஜித்குமார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம், கவுன்சிலர் பன்னீர்செல்வம், காந்தி சேவாமைய அமைப்பாளர் நவ்ஷாத் உட்பட பலர் பங்கேற்றனர்.