/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கலால்துறை சோதனையில் போதை மாத்திரை பறிமுதல்; ஐந்து பேர் கைது பாலக்காட்டில் ஐந்து பேர் கைது
/
கலால்துறை சோதனையில் போதை மாத்திரை பறிமுதல்; ஐந்து பேர் கைது பாலக்காட்டில் ஐந்து பேர் கைது
கலால்துறை சோதனையில் போதை மாத்திரை பறிமுதல்; ஐந்து பேர் கைது பாலக்காட்டில் ஐந்து பேர் கைது
கலால்துறை சோதனையில் போதை மாத்திரை பறிமுதல்; ஐந்து பேர் கைது பாலக்காட்டில் ஐந்து பேர் கைது
ADDED : ஜன 16, 2025 10:40 PM

பாலக்காடு;பாலக்காடு மாவட்டத்தில், இரு இடங்களில் கலால் துறை நடத்திய வாகனச்சோதனையில், 40.734 கிராம் கொண்ட போதை மாத்திரையை பறிமுதல் செய்தனர்; இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், வாளையார் பாம்பாம்பள்ளம் கோவை -- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாலக்காடு மற்றும் ஒற்றைப்பாலம் இன்ஸ்பெக்டர்கள் அஜயகுமார், விபின்தாஸ் தலைமையிலான கலால் துறையினர் நேற்று வாகனச்சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது கோவையில் இருந்து, பாலக்காடு நோக்கி வந்த பஸ்சை தடுத்து, சோதனை செய்ய முயன்ற போது, முன்கூட்டிய அறிந்த இருவர், பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றனர். இதைக்கவனித்த அதிகாரிகள், இருவரின் பையை சோதனை செய்ததில், 36.275 கிராம் எடை உள்ள 'மெத்தம்பேட்டமைன்' என அழைக்கப்படும் கொடிய போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடித்தனர்.
விசாரணையில், இவர்கள் கொல்லம் மாவட்டம் பள்ளிமண் மியன்னுார் பகுதியைச் சேர்ந்த ஷினாஸ் 25, பாலக்காடு கண்ணாடி வடக்குமுறி பகுதியைச் சேர்ந்த பிபின், 21, ஆகியோர் என்பதும், அதில், ஷினாஸ், 10.575 கிராமும், பிபின், 25.700 கிராம் எடையிலான போதை மாத்திரை தனித்தனியாக கடத்தி வந்துள்ளதும் தெரிந்தது.
தனித்தனி வழக்குகள் பதிவு செய்து, கைது செய்த இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல், திருந்தால உதவி இன்ஸ்பெக்டர் சுரேஷின் தலைமையிலான கலால் துறையினர் நேற்று காலை ஞாங்காட்டிரி பகுதியில் வாகன சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி நடத்திய சோதனையில், 4.459 கிராம் எடை கொண்ட 'மெத்தம்பெட்டமைன்' என்ற போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடித்தனர்.
விசாரணையில் இவர்கள் ஓங்கல்லுார் பகுதியைச்சேர்ந்த முகமது ஹாரிஸ்,35, நவுஷாத்,36, முகமது பாஹிஸ், 37, ஆகியோர் என்பது தெரிந்தது. கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இக்கடத்தல்கள் தொடர்பாக, தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கலால் துறையினர் தெரிவித்தனர்.