/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நஞ்சநாடு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
/
நஞ்சநாடு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஆக 19, 2025 09:05 PM
ஊட்டி:
நஞ்சநாடு அரசு பள்ளியில் என்.சி.சி., மாணவர்கள் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டி அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலை பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி சார்பில் மரக்கன்று நடுதல், சுற்றுசூழல் விழிப்புணர்வு, பிளாஸ்டிக்கின் தீமை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, என்.சி.சி., கமாண்டர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், 31 தமிழ்நாடு என்.சி.சி., அணி சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளியின் என்.சி.சி., முதன்மை அலுவலர் சுப்ரமணியன் தலைமை வகித்தார்.
தலைமையாசிரியர் செந்தில், சுபேதார் பத்மநாபன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி மொட்டோரை, நரிகுளி ஆடா, கக்கன்ஜி காலனி வரை சென்றனர். பேரணியில் பங்கேற்ற என்.சி.சி., மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷம் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் சென்றனர். இதில், ஆசிரியர்கள் சசிபூசன், சரவணன், வேலாயுதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.